
கூகிள் தனது வரைபட தயாரியை கனடாவில் ஆரம்பித்துள்ளது. இது ஒரு கூகிளினுடைய வரைபடத்தில் திருத்தங்களை ஏற்படுத்தவும், புதிய அம்சங்களை உட்புகுத்தவும் உதவுகின்ற ஒரு செயற்பாட்டுக் கருவி (tool) ஆகும்.
கூகிள் வரைபடத்தில் பூரணப்படுத்தப்படாத பகுதிகளை நிரப்புவதற்காக 2008 இல் 17 நாடுகளில் தனது வரைபட தயாரியை (Map Maker) அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இவற்றுள் பெரும்பாலாவை சிறிய தீவுகளாகும். தனிநபர்களால் செம்மைப்படுத்தல் மற்றும் மாற்றங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இச்சேவையைக் கொண்டு செய்யப்பட்ட மாற்றமாந்து கூகிள் மப், கூகிள் ஏர்த் (Google Maps and Google Earth) என்பவற்றால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன் ஒரு ஒப்புதல் செயன்முறையைக் (approval process) கடத்தல் வேண்டும். சிறு கூகுளாளர் குழு ஒன்று வளர்ந்து வரும் உலகம் முழுவதிலுமுள்ள சமூக பதிவாளர்களின் பதிவுகளையும், சேர்கைகளையும் சரிப்பார்த்துக் கொள்கிறார்கள். நம்பகமான திருத்தங்கள் கூகிள் வரைபடத்தில் ஒரு மணித்தியாளத்திற்குள் உள்வாங்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறு வாரங்களுக்கு முன் "வரைபட தயாரி" (Map Maker) அலுவலகக் குழுவொன்று முன் ஆயத்தப் பணிக்காக ஒன்றாரியோவின் வாட்டலுப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனணயத்தள இணைப்பு
http://www.google.com/mapmaker
காணொளி இணைப்பு
http://www.youtube.com/watch?v=BPeWJTuD7G8&feature=player_embedded







